பூக்கடை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை பூக்கடை ரத்தன் பஜார் சாலை, என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

Update: 2021-09-21 09:09 GMT
இதையடுத்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் 59-வது வார்டு உதவி பொறியாளர் கார்த்திக் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அந்த சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை வாசிகளை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபனா மற்றும் போலீசார் வாக்குவாதம் செய்த பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பிறகு சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்