ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்ணிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ்

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்ணிடம் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்றனர்.

Update: 2021-09-20 22:41 GMT
நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளியை சேர்ந்தவர் ஜனோ ஜோஸ் மனைவி ஜெஸ்டர் (வயது 61) . இவர் நேற்று சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து தனது ஊருக்கு செல்வதற்காக ஐகிரவுண்டு பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப்போது தனது கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மாயமாகி இருந்தது. யாரோ மர்மநபர்கள் பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெஸ்டர் கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த ஐகிரவுண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெஸ்டரை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்