மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா

மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா

Update: 2021-09-20 19:59 GMT
துறையூர், செப்.21&
திருச்சி மாவட்டம் துறையூர் தெப்பகுளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12&ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அப்பள்ளியில் படித்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அப்பள்ளியில் படிக்கும் 13 மாணவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தது. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தநிலையில் அப்பள்ளியை சேர்ந்த மேலும் ஒரு மாணவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்