நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி

லாலாபேட்டை அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-20 18:55 GMT
லாலாபேட்டை
புதுமாப்பிள்ளை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தங்கராஜ் (வயது 25). கூலித்தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி ஒரு மாதம் ஆகிறது. இந்தநிலையில் தங்கராஜ் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் பிள்ளபாளையம் சென்று விட்டு லாலாபேட்டைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிள்ளபாளையம் ரைஸ் மில் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். 
பலி 
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்