அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Update: 2021-09-20 18:52 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் பட்டியல்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு

வேலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுகுணா (வார்டு&2), கோமதி (3) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காட்பாடி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஜான்சிராணி (வார்டு&1) , தனஞ்செயன் (2), சுஜாதா (3), சாந்தி (4), வாணி (6), நந்தினி (7), அம்பிகா (8), தீபா (9) , கவிதா (10), பிரேமா (11), ராதிகா (12), புஷ்பாஞ்சலி விஜய்ஆனந்த் (13), பிரியங்கா (14), அன்பரசு (15), சுப்பிரமணி (16), அமுதா (17), ஜெயந்தி (18), மோகன்குமார் (20), பாக்கியராஜ் (21) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்