தேசூர் பள்ளியில் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா
தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து மூடப்பட்டது.
சேத்துப்பட்டு
தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து மூடப்பட்டது.
செஞ்சியில் சிகிச்சை
திருவண்ணாமலை மாவட்டம் தேசூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 1-ந்தேதி திறக்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் தலா 20 மாணவர்கள் வீதம் அமர வைத்து பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் பிளஸ்-1 படிக்கும் விழுப்புரம் மாவட்டம் கள்ளப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாணவர் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், உடனடியாக ஆரணி கல்வி மாவட்ட அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சம்பத், பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். அதன்படி பள்ளிக்கு விடுமுறை அளித்து மூடப்பட்டது.
20 மாணவிகளுக்கு பரிசோதனை
இதையடுத்து பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள் என 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவருடன் பள்ளிக்கு வந்த கள்ளப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக சளி மாதிரியை சேகரித்து செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை தேசூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கணேசன்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.