கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 5065 பேர் வேட்பு மனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 5065 பேர் வேட்பு மனு தாக்கல்

Update: 2021-09-20 17:40 GMT
கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களில் வேட்புமனு தாக்கலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 491 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,663 பேர் என 3,203 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

தொடர்ந்து நேற்று 5-வது நாளாக வேட்பு மனுதாக்கல் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 46 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 461 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,031 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,527 பேர் என நேற்று ஒரே நாளில் 5,065 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நிறைந்த பவுர்ணமி நாள் என்பதால் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 48 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 508 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,522 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,190 பேர் என மொத்தம் 8,268 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்