நத்தத்தில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
நத்தத்தில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம்:
நத்தம் அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). வியாபாரியான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.