வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு

புதுப்பாளையம் ஊராட்சி பெண் பிரதிநிதிகளின் கணவர் ஆதிக்கத்தை தடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2021-09-20 13:57 GMT
சேவூர்
அவினாசி அருகே புதுப்பாளையம் ஊராட்சி பெண் பிரதிநிதிகளின் கணவர் ஆதிக்கத்தை தடுக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் கஸ்தூரி பிரியா ஊராட்சி மன்ற தலைவராகவும் மற்றும் ஊராட்சி மன்ற பெண் பிரதிநிதிகளாக ஆறு நபர்கள் உள்ளனர். இந்த நிலையில் சில பெண் பிரதிநிதிகளின் கணவர்கள் மற்றும் உறவினர்கள் ஆணாதிக்க சிந்தனையோடு ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு நிதி ஆதார பயன்பாடுகள் உட்பட அனைத்தையும் தீர்மானிக்கின்றனர். இதனால் பெண் பிரதிநிதிகள் சுயமாக செயல்படுவது தடை செய்யப்பட்டு உரிமைகள் பறிக்கின்ற சூழ்நிலை உருவாகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுப்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கே.பாலசுப்பிரமணி, கே.குமாரவேல், எம்.தேவிகா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.முருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகள் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். இம் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார்.


மேலும் செய்திகள்