மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காங்கேயம்,வெள்ளகோவிலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது
.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்;
காங்கேயம்
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காங்கேயம்,வெள்ளகோவிலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது பெட்ரோல் டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு விலைவாசி உயர்வு பொருளாதார சீரழிவு தனியார் மயமாக்கல் வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பிகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்டவைகளை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
காங்கேயம் நகர தி.மு.க.சார்பில் நேற்றுகாலை காங்கேயம் தி.மு.க. கிழக்கு நகர பொறுப்பாளர் ஆயக்காடு எஸ்.செந்தில்குமார், மேற்கு நகர பொறுப்பாளர் காயத்ரி பி.சின்னச்சாமி ஆகியோர் தலைமையில் சென்னிமலை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் காங்கேயம் கிழக்கு மற்றும் மேற்கு நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் கட்சி அலுவலகம் முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எஸ்.சிதம்பரம் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் முன்பு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.பி.அப்புகுட்டி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் மோளகவுண்டன்வலசு, கே.சந்திரசேகரன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நகர செயலாளர் கே.ஆர்.முத்துக்குமார் துணை செயலாளர் சபரி முருகானந்தம் அவைத்தலைவர் குமரவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பச்சாகவுண்டன் வலசு பாலசுப்பிரமணி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராணி ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் தண்டபாணி மற்றும் சக்திவேல் கோபி மேட்டுப்பாளையம் சிவசுப்பிரமணியம் மாந்தபுரம் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாந்தபுரத்திலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளகோவில் கடைவீதியில் வட்டார தலைவர் நடராஜ் தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நகர தலைவர் ரவி மற்றும் இளைஞரணி நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
================