ஆழ்வார்திருநகரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
ஆழ்வார்திருநகரி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் சுமார் 12 மணியளவில் சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் மழை கொட்டியது. மாலை 4 மணி வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அனல் காற்று வீசிய இப்பகுதியில் இதமான சூழல் உருவாகியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.