சாக்கடை கால்வாயில் அடைப்பு
கோவை கணபதி சத்தி ரோட்டில் கட்டபொம்மன் வீதியில் இருந்து மணியக்காரபாளையம் பிரிவு வரை சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த பகுதியில் ஏற்பட்டு உள்ள அடைப்பு காரணமாக கழிவுநீர் வழிந்தோடாமல், அங்கேயே தேங்கி கிடக்கிறது.
இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரராஜன், கணபதி.