ஆபாச படத்தை காட்டி பெண்ணிடம் மிரட்டல்; காதலன் கைது
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-;
நான் சிவகுமார் என்பவரிடம் கள்ளத்தொடர்பில் இருந்தேன். எனது கணவருக்கு தெரியாமல் அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன். தற்போது அவரை விட்டு பிரிந்துவிட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து உல்லாசத்துக்கு வற்புறுத்தி வருகிறார். உல்லாசத்துக்கு வர மறுத்தால், என்னுடன் அவர் நெருக்கமாக உள்ள ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். புகார் கொடுத்த பெண்ணின் காதலன் சிவகுமார் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.