போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
மதுரை,
மதுரை யாகப்பாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 32). இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் பெற்றோர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெகதீசனை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.