9 பவுன் நகை பறிப்பு

2 பெண்களிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.

Update: 2021-09-19 20:57 GMT
மதுரை, 
மதுரை கரிமேடு இந்திராணி நகரை சேர்ந்தவர் சாலமோன் ராஜா. இவருடைய மனைவி செல்வமணி (வயது 35). சம்பவத்தன்று இவர் முடக்குச்சாலை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை தாசில்தார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவருடைய மனைவி இந்திரா (52). இவர் அண்ணா பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்த போது அவர் வைத்திருந்த 6¼ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்