உதவி மின்பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
சேடபட்டி அருகே மின்நிலைய அலுவலகத்திற்குள் உதவிமின் பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உசிலம்பட்டி,
சேடபட்டி அருகே மின்நிலைய அலுவலகத்திற்குள் உதவிமின் பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மின்தடை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மானூத்தை சேர்ந்தவர் பெரியகாளை மகன் சின்னசாமி (வயது51). இவர் தற்போது உசிலம்பட்டி பி.எம்.டி.நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சின்னச்சாமிக்கு நதியா என்ற மனைவியும் நந்தினி, சுவேதா என்ற 2 மகள்களும் உள்ளனர். சின்னச்சாமி சேடபட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை துணை மின் நிலையத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக உதவி மின் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சின்னக்கட்டளை, சேடபட்டி பகுதியில் பெய்த மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டது. மின் தடைகளை சரி செய்ய தனது சக ஊழியர்களுடன் சென்று இரவு 12 மணி வரை மின் தடைகளை சரி செய்த சின்னச்சாமி பணியை முடித்துவிட்டு அலுவலகத்திலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது.
மற்ற ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு காலை அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது. தனியாக இருந்த உதவி மின் பொறியாளர் சின்னச்சாமி அறையை பூட்டிக்கொண்டு அறை மின் விசிரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
வழக்குப்பதிவு
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் அறையை உடைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சின்னச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து சேடபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் நிலைய உதவி மின் பொறியாளர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.