பெண்ணை மிரட்டிய கஞ்சா வியாபாரி கைது
பெண்ணை மிரட்டிய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.;
பணகுடி:
பணகுடி கோரி காலனியைச் சேர்ந்த புருஷோத்தமன் மகன் மணிகண்டன் (வயது 30). இவர் வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் கொடுத்து வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவிலை சேர்ந்த விஜயன் மனைவி மஞ்சுளா (36) என்பவர், மணிகண்டனிடம் ஏன் சிறுவர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் கொடுத்து கெடுக்கிறாய் என்று கேட்டாராம்.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மஞ்சுளா பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.