ஆற்காடு
ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆற்காடு தோப்புக்கானா பகுதியைச் சேர்ந்த கோகுல் (வயது 22) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.