திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில்விற்பனை குறைவாக இருந்தது

திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில்விற்பனை குறைவாக இருந்தது

Update: 2021-09-19 16:43 GMT
திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மீன் விற்பனை அதிகமாக நடப்பது வழக்கம். கூட்டம் அதிகம் கூடுவதால் தெற்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டில் விற்பனை நடைபெற்றது. 
புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் பெரும்பாலானவர்கள் அசைவத்தை தவிர்ப்பார்கள். அதுபோல் நேற்று மீன் மார்க்கெட்டுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதன்காரணமாக மீன் விற்பனை குறைவாக இருந்தது. மீன் வரத்து இருந்த போதிலும் மீன் விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்