ஆண்டிப்பட்டியில் இந்து எழுச்சி நாள் விழா
ஆண்டிப்பட்டியில் இந்து எழுச்சி நாள் விழாவையொட்டி ராமகோபாலன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவன தலைவர் ராமகோபாலன் பிறந்தநாள் இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் முன்பு ராமகோபாலன் உருவப்படம் வைக்கப்பட்டு மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மொக்கராசு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர தலைவர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல தேனி சாலையில் இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ராமகோபாலன் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. கொப்பயம்பட்டியில் இந்து முன்னணி அன்னையர் சங்க மாவட்ட செயலாளர் இந்திரா தலைமையில் பெண்கள் பொங்கல் வைத்து ராமகோபாலன் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்கள்.