கார் மோதி தனியார் நிறுவன கண்காணிப்பாளர் பலி

திண்டுக்கல் அருகே கார் மோதி தனியார் நிறுவன கண்காணிப்பாளர் பலியானார்.

Update: 2021-09-19 16:24 GMT
திண்டுக்கல்: 

அம்பாத்துரை பாண்டியன் நகரை சேர்ந்த பெருமாள் மகன் ராஜேஷ் (30). இவர் தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

அப்போது அம்பாத்துரை போலீஸ் நிலையம் அருகே 4 வழிச்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று ராஜேஷ் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்