பெரியகுளம் நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கலெக்டர் ஆய்வு

பெரியகுளம் நகராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-19 16:13 GMT
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம், வடுகா நாயுடு மண்டபம், 10-ம் பகுதி நகராட்சி பள்ளி, சுப்பிரமணிய சாவடி, 3-ம் பகுதி நகராட்சி பள்ளி ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் 3-ம் பகுதி பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்து கொண்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த கொரோனா அரக்கன் பொம்மை மற்றும் விழிப்புணர்வு பொம்மை ஆகியவற்றை பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்த நகராட்சி அதிகாரிகளை பாராட்டினார். மேலும் பொதுமக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் இந்த பொம்மைகளை வைக்குமாறு அறிவுறுத்தினார். 
பின்னர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை கலெக்டர் பார்வையிட்டார். இந்த சிறப்பு முகாமில் நகராட்சி டாக்டர் சாந்தி கணேஷ் மேற்பார்வையில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சப்&கலெக்டர் ரிஷப், நகராட்சி சுகாதார ஆய்வாளர் அசன்முகமது மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் செய்திகள்