போராட்டத்தில் உயிரிழந்த ரெயில்வே ஊழியர்களுக்கு வீரவணக்கம்

திண்டுக்கல் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் ரெயில் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-09-19 16:05 GMT
திண்டுக்கல்: 

ரெயில்வே ஊழியர்கள் கடந்த 1968&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19&ந்தேதி அகவிலைப்படி உயர்வு கேட்டு (பஞ்சப்படி) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு சென்ற 7 ஆயிரத்து 800 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 

இவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அதேநாளில் ரெயில்வே ஊழியர்கள் வீரவணக்கம் செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் ரெயில் நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். 


கோட்ட தலைவர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். அதையடுத்து அகவிலைப்படி உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வேலை இழந்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சின்னத்துரை, வெங்கட்ராமன் உள்பட ரெயில்வே ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்