சட்ட விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2021-09-19 13:16 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி திரேஸ்புரத்தில் நடத்தியது. முகாமுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரீத்தா தலைமை தாங்கி பேசினார். கிராம உதயம் மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். முகாமில் பொது மக்கள் அரசு நலத்திட்டங்களை முறையாக அணுகி பெறவேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பெண்களுக்கு உண்டான ஜீவனாம்சம் பற்றியும், குழந்தைகளுக்கு உண்டான பாலியல் துன்புறுத்தலில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டது. முகாமில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்