விநாயகா மிஷன்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வலிமை இந்தியா சுதந்திர ஓட்டம்
சேலம் விநாயகா மிஷன்சின் சென்னை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் வலிமை இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 மாமல்லபுரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் கலந்து கொண்டு ஓட்டத்தை தொடங்கி வைத்தார். துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். சுதந்திர ஓட்டம் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் தொடங்கி 5 ரதம் பகுதியில் முடிவடைந்தது. இதில் துறையை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் வைஷ்ணவா தேவி செய்திருந்தார்.