நாம் தமிழர் கட்சி சார்பில் இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினம்

நாம் தமிழர் கட்சி சார்பில், இரட்டை மலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு சின்ன போரூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படத்துக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Update: 2021-09-19 10:03 GMT
பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

ஓய்வுபெற்ற நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஆளுநர்களாக நியமிக்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. மக்களை சந்திப்பவர்களை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர், ஏற்கனவே ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் சிறப்பாக செயல்படுவார். புதுச்சேரியில் கிரண்பெடி எப்படி செய்தார்? அது போன்று இருக்க கூடாது என நினைக்கிறோம். தி.மு.க. தங்களை நேர்மையாளர்களாக காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான். தமிழகத்தில் எந்த தீய திட்டத்துக்கும் வேர் தேடி போனால் தி.மு.க.தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்