குண்டர் தடுப்பு சட்டத்தில் 10 பேர் கைது; போலீஸ் கமிஷனர் நடவடிக்கை
சென்னையில் கொலை, கொலை முயற்சி, கடத்தல், நில அபகரிப்பு, போக்சோ மற்றும் பாலியல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஓராண்டு ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் ஜெபராஜ் (வயது 56), வெங்கடேசன் (34), பவுலின் டோமினிக் என்ற ஜெயசீலி (47) , டில்லிபாபு (47) , பிரித்விராஜ் (36) , பிரகாஷ் (28) , சக்திவேல் (22) , ஆடு என்ற சரவணன் (22) , சூர்யா (23) மாட்டு சங்கர் (38) ஆகிய 10 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை 271 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.