சேலத்தில் அரசுக்கு எதிராக பிரசாரம்; 5 பேர் கைது

சேலத்தில் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-18 22:28 GMT
சேலம்:
தமிழ்நாடு சீர்திருத்த இயக்க ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இதில், அந்த இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, அவர் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயப்படுத்தி எடுக்கக்கூடாது. முககவசம் அணிய சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. இதற்கு சட்டப்பூர்வ உத்தரவு இல்லை என்றும், எந்த உத்தரவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக இருந்தால் தான் மக்கள் ஏற்பார்கள் என்று பேசினார். இதனையடுத்து அரசுக்கு எதிரான கருத்துகளை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ததாக அந்த இயக்கத்தின் தலைவரான கன்னங்குறிச்சியை சேர்ந்த ஜெயசீலன் (வயது 47), ஜான்சன்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (22), அம்மாபேட்டையை சேர்ந்த ஆகாஷ் (21), ராசிபுரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (43), சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த துரைராஜ் (47) ஆகிய 5 பேர் மீது பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்