பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்.

Update: 2021-09-18 20:01 GMT
நெல்லை:

மூலைக்கரைப்பட்டி அருகே ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தாஸ் (வயது 60). இவர் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய மகளை கங்கைகொண்டான் அருகே அலங்காரபேரியில் திருமணம் செய்து கொடுத்தார். தாசின் மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. எனவே அவர்களை பார்ப்பதற்காக சம்பவத்தன்று தாஸ் கோவையில் இருந்து நெல்லை செல்லும் பஸ்சில் வந்தார்.

அவர், கங்கைகொண்டான் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் தாசின் மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் தாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்