தொழிலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
தொழிலாளியை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே நொச்சிகுளத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 33). கூலி தொழிலாளி. இவருடைய தங்கை ஆறுமுகசெல்வியை அதே ஊரைச் சேர்ந்த சின்னத்துரைக்கு திருமணம் செய்து கொடுத்தனர். பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆறுமுகசெல்வி கணவரை பிரிந்து அண்ணன் பெருமாள் வீட்டில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சின்னத்துரை தன்னுடைய தம்பி பாலமுருகனுடன், பெருமாள் வீட்டுக்கு சென்று ஆறுமுகசெல்வியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, பாலமுருகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பெருமாளை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரை, பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.