100 ஆடுகளை பலியிட்டு கூட்டு வழிபாடு

சாயல்குடி அருகே நடந்த சமூக நல்லிணக்க விழாவில் கூட்டு வழிபாடு நடந்தது. அப்போது 100 ஆடுகளை பலியிட்டு விருந்து பரிமாறப்பட்டது

Update: 2021-09-18 19:26 GMT
சாயல்குடி, செப்
சாயல்குடி அருகே நடந்த சமூக நல்லிணக்க விழாவில் கூட்டு வழிபாடு நடந்தது. அப்போது 100 ஆடுகளை பலியிட்டு விருந்து பரிமாறப்பட்டது.
கூட்டு வழிபாடு
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் அரக்காசு அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த கோவிலில் இந்து, முஸ்லிம்களை சேர்ந்தவர்கள் ஆண்டுத்தோறும் கூட்டுவழிபாடு நடத்துவார்கள். 
அப்போது பலர் ஆடுகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். இந்த ஆடுகளை பலியிட்டு அசைவ விருந்தும் நடக்கும்.  அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவார்கள். இந்த விழா சுமார் 100 ஆண்டுகளாக ஒன்றுமையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
அசைவ விருந்து
இதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டு வழிபாடு நேற்று நடந்தது. இதில் இந்து, முஸ்லிம் மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு செய்தனர். அப்போது 100&க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டனர். 
பின்னர் அங்கேயே சமைத்து அசைவ விருந்து நடந்தது. இதில் கமுதி, சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்