மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
பெரம்பலூர் மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 35). கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திருமானூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவை சரி செய்வதற்காக சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்த 17 வயது பிளஸ்&2 மாணவியை, கண்காணிப்பு கேமராவின் வயரை பிடித்துக் கொள்ளுமாறு கூறி, மாடிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் கீழப்பழுவூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.