ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்வதால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-18 19:15 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வத்திராயிருப்புக்கு வந்து கல்வி பயின்று செல்கின்றனர். இந்தநிலையில் மாலையில் பள்ளி விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு மாணவர்கள் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் அரசு பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு கூட்டம், கூட்டமாக பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. பள்ளி மாணவர்கள் பஸ்களில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் இன்றியும் பயணம் செய்வதால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பஸ்களில் படியில் பள்ளி மாணவர்கள் நின்று செல்வதால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ் வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும், மாலை வேளைகளில் பள்ளி மாணவர்களை பஸ்களில் பாதுகாப்பு முறையில் ஏற்றிவிட்ட பஜார் பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்