ஊரக உள்ளாட்சி தேர்தல்: 4-ம் நாளில் 5 பேர் வேட்பு மனு தாக்கல்
4-ம் நாளில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள 48 இடங்களுக்கு அடுத்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கலில் நேற்று 4-ம் நாளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினமாகும். இதனால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் நடைபெறும். வருகிற 22-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.