தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

சிவகாசியில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-18 18:08 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள திருமேனி நகரை சேர்ந்தவர் கொம்பையா மகன் ராஜதுரை (வயது 44). இவருக்கு நேசம்மலர் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜதுரை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது அங்கு வந்த லிங்கபுரம் காலனியை சேர்ந்த பொன்னையன் என்கிற மாரிச்செல்வம் (24) , மணிகண்டன் என்கிற கோபிகுட்டி (22), விக்னேஷ்குமார் என்கிற விக்கி (22), கார்த்திக் என்கிற குட்டகார்த்திக் (20) ஆகியோர் தகராறு செய்து கிரிக்கெட் மட்டையால் தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த ராஜதுரை, சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னையன் என்கிற மாரிச்செல்வம், மணிகண்டன் என்கிற கோபிகுட்டி, விக்னேஷ்குமார் என்கிற விக்கி, கார்த்திக் என்கிற குட்டகார்த்திக் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்