தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2021-09-18 17:48 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் அருகே துரைபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40), 

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

 இவரது மனைவி கோமதி (35) இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோமதி கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு ஆற்காட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில் பாஸ்கர் நேற்று  இரவு மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு செல்போன் மூலம் பேசியுள்ளார். அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாஸ்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்&இன்ஸ்பெக்டர் சீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்