வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2021-09-18 17:10 GMT
வேலூர்

வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6-ந் தேதி மற்றும் 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. 

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் கடந்த 15-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

இதில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மனு பெறப்பட்டு வருகிறது. வருகிற 22&ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

வாக்குகள் எண்ணுவதற்காக 7 ஒன்றியத்துக்கும் 7 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 

அதன்படி வேலூருக்கு தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், கணியம்பாடிக்கு கணாதிபதி துளசிஸ் கல்லூரியிலும், அணைக்கட்டுக்கு அன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், காட்பாடிக்கு காட்பாடி சட்டக்கல்லூரியிலும், கே.வி.குப்பத்துக்கு சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குடியாத்தத்துக்கு கே.எம்.ஜி.கல்லூரியிலும், பேரணாம்பட்டுக்கு மெரிட் ஹாஜி இஸ்மாயில் சாகித் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

இந்தநிலையில் வேலூர், கணியம்பாடி, அணைக்கட்டு ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இன்று ஆய்வு செய்தார்.

அப்போது வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, கண்காணிப்பு அறை உள்ளிட்டவை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும். எந்த இடத்தில் அமைக்கப்படவேண்டும் என்பது குறித்தும், அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் தேவைப்படும் போலீஸ் பாதுகாப்புகள் குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்