தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம்:
கம்பம் சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (30). இவரது மனைவி விஜயலட்சுமி (26). இவர்களுக்கு தர்சினி (5) , யோகேஷ் (9) என 2 குழந்தைகள் உள்ளனர். சுபாஷ் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் விஜயலட்சுமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விஜயலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.