கூடலூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

கூடலூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2021-09-18 15:07 GMT
கூடலூர்

கூடலூர் புத்தூர்வயல் பகுதியை சேர்ந்தவர் குஞ்சு ராமன். இவரது மனைவி ரமாதேவி (வயது 54). இவருக்கு மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரமாதேவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரமாதேவி பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்