புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி 4 திவ்ய தேசம் கொண்ட உலகளந்த பெருமாள் கோவிலில் விசேஷ பூஜை
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி, கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து வைணவ தலங்களிலும் அதிகாலையிலே பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 4 தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் குறைந்த அளவு பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.