வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-09-18 11:55 GMT
வாணியம்பாடி

ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் எண்ணப்பட உள்ளது. 

அந்த மையத்தில் வாக்கு எண்ணுவதற்கு போதுமான மேஜை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது கலெக்டர், அதிகாரிகளிடம் பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போதுமான அளவுக்கு செய்ய வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராஜூ, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், செயல் அலுவலர் கணேஷ், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்