மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பலி
பாணாவரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;
காவேரிப்பாக்கம்
பாணாவரம் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே மாகாணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45) மின் ஊழியர்.
இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்தமழை காரணமாக கோடம்பாக்கம் கிராமத்தில் மின்தடை ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்காக குமரேசன் இன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.