போலீஸ் நிலைய பெயர் பலகையில் தனியார் பெயர்கள் இடம் பெறக்கூடாது டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

சில போலீஸ் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும்.

Update: 2021-09-17 23:20 GMT
சென்னை, 

டி.ஜி.பி.சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

சில போலீஸ் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். எனவே விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலைய பெயர் பலகைகளை அகற்றி, போலீஸ் நிலைய பெயர் மட்டுமே உள்ள புதிய பெயர் பலகையை அமைத்திட அறிவுறுத்தப்படுகிறது. போலீ்ஸ் நிலைய முன்பணத்தை இதற்காக செலவிடலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்