ரெயில்வேத்துறையில் வேலை: போலியான ஆணைகளை வழங்கி ரூ.55 லட்சம் மோசடி - கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு
ரெயில்வேத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலியான ஆணைகளை வழங்கி ரூ.55 லட்சம் மோசடி புகார் மனு கொடுக்கப்பட்டது.
சென்னை,
ரெயில்வேத்துறையில் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 11 பேர்களிடம் ரூ.55 லட்சம் வரை மோசடி செய்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டது. வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட பணத்தை இழந்த 11 பேர் புகார் மனுவை கொடுத்தனர். ரெயில்வேயில் வேலை கிடைத்துவிட்டதாக கூறி போலியான ஆணைகளை வழங்கி, 3 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.