தவறி விழுந்த வாலிபர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.;

Update: 2021-09-17 22:04 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் அருகே உள்ள கொக்ககுளத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கோவிலில் இருந்து கொக்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கொக்குளம் அருகே செல்லும்போது சாலையின் வளைவில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்