தூக்கில் தொங்கிய வாலிபர் சாவில் மர்மம்

தூக்கில் தொங்கிய வாலிபர் சாவில் மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-17 20:13 GMT
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், வத்தனாக்கோட்டையை சேர்ந்தவர் சிங்காரவடிவேல்(வயது 28). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊரில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து வந்திருந்தார். பின்னர் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தினார். மாலை 3 மணி அளவில் மனைவியிடம், குன்றாண்டார்கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த கவுசல்யா, இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று குன்னாண்டார்கோவிலை அடுத்த கூகூர்குளத்துகரை பகுதியில் உள்ளகருவேல மரத்தில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உடையாளிப்பட்டி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது தூக்கில் தொங்கியவர் சிங்காரவடிவேல் என்பது தெரிய வந்தது. அவரது கால்கள் தரையை தொட்டபடியும், இரண்டு கால்களின் தொடை பகுதி மற்றும் மார்பில் தீக்காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலில் தீக்காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் கொலை செய்தனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்