பஸ் மீது கல்வீச்சு; கண்ணாடி உடைந்தது

பஸ் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி உடைந்தது.;

Update:2021-09-18 01:42 IST
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை அரியலூர் செல்லும் பஸ் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து பயணிகள் இறங்கினர். பின்னர் பயணிகள் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் கல் வீசியதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் டிரைவர் நாகூர் கனி(வயது 35), கண்டக்டர் அசோக் ரத்தினம் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்