130 பேருக்கு கொரோனா தடுப்பூசி

130 பேருக்கு கொரோனா தடுப்பூசி;

Update:2021-09-18 01:30 IST
முத்தூர்
முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் முத்தூர் சுகாதாரத்துறை தலைமையிலான மருத்துவ, செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு அரசு, தனியார் கல்லூரி
மாணவ - மாணவிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் நகர, கிராம பொதுமக்கள் என மொத்தம் 80 பேருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போட்டனர்.
நத்தக்காடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. முகாமில் சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்கள் என மொத்தம் 50 பேருக்கு முதல், 2 வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போட்டனர். இதன்படி முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 130 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


----
Reporter : Sakthivel.K  Location : Tirupur - Dharapuram - Muthur

மேலும் செய்திகள்