வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றது.;
குளித்தலை,
குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி கவிதா (வயது 45). இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கவிதா தனது வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு முதல் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றார். நேற்று முன்தினம் காலை மீண்டும் வீட்டின் கீழ்பகுதிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.
இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. ஆனால் எந்த பொருளும் திருடு போகவில்லை. இந்த திருட்டு முயற்சி குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்.