பட்டாசு விபத்தில் மேலும் ஒருவர் சாவு

தாயில்பட்டி அருகே பட்டாசு விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.

Update: 2021-09-17 19:41 GMT
தாயில்பட்டி, 
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த எஸ்.பி.எம். தெருவில் பாலமுருகன் என்பவர் வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு உற்பத்தி நடைபெற்றது. அப்போது பட்டாசு தயாரிப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி சண்முக ராஜ் என்பவர் பலியானார். மேலும் இந்த வெடிவிபத்தில் 8 பேர் காயமடைந்தனர்‌. இதில் சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துராஜ் (வயது 45) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் செய்திகள்